சமயம் வரும் போது சொல்கிறேன்!

குரு ஒருவர் தனது சீடர்களுக்கு பாடம் நடத்தினார். 
"எந்த ஒரு செயலும் வெற்றி 
பெற வேண்டுமானால்,செயலில் மட்டுமே கவனம் இருக்க வேண்டுமே தவிர,
அதன் பலனில் 
இருக்கக் கூடாது .!"
என்ற கீதையின் வாசகத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு சீடன்
எழுந்து,"அது எப்படி ?
செயலில் அக்கறை
என்பதே அதன் பலனை எண்ணித் தானே, பிறகு எப்படி அதைத் தவிர்ப்பது.?" எனக் கேட்க,
" சமயம் வரும் போது சொல்கிறேன்!" என்றார் குரு.
ஒரு முறை உபன்யாசம் முடிந்து திரும்பும் வழியில்,மாமரம் ஒன்றில் பெரிய கனியொன்றைக் கண்ட சீடன்,அதைச் சுவைக்க விரும்பி,கல் எடுத்து வீசினான்.
பல முறை முயன்றும் குறி தவறியதால் பலனில்லை.
அதைக் கண்ட குரு,தானே ஒரு கல்லை எடுத்து வீச ,ஒரே
வீச்சில் கனி விழுந்தது.
ஆச்சரியமடைந்த சீடன்,
"எப்படி சுவாமி இது.?"என்றான்.
"வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளோடு ,அதைச் சுவைக்கும் போது எப்படி இருக்கும் என்று பலனையும் நினைத்தபடியே,கல்லை வீசினாய்.
வீழ்த்த வேண்டும் என்பது
மட்டுமே ,என் குறிக்கோளாக இருந்தது.அதனால் என்னால் எளிதாகச் செய்ய முடிந்தது.
நீ அன்று கேட்ட கேள்விக்கும் இது தான் பதில்.!" என்றார் குரு.
செயலின் பலனை எதிர்பார்க்கும் போது,கவனச் சிதறலால் செயலில்
தோல்வி ஏற்படலாம்.
ஆனால்,செயலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல் படுத்தும் போது வெற்றி
என்பது உறுதியாகும்.!

Popular posts from this blog

[Solved] Hive installation error: java.net.URISyntaxException: Relative path in absolute URI

Install Android SDK in centOs

Top 10 Crackers websites 2017